குஜராத்தில் கைதான பயங்கரவாதிகள் தமிழர்களா? பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களின் தலைக்கு குறி! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் நேற்று 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஐபிஎல் போட்டிகளுக்காக கிரிக்கெட் அணி வீரர்கள் அகமதாபாத் விமான நிலையம் வரவுள்ள நிலையில், ஏதேனும் இடையூறு ஏற்படுத்த இவர்கள் வந்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்தது.

தற்போதுவரை இந்த தீவிரவாதிகளை அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்கட்ட விசாரணையில் இந்த பயங்கரவாதிகள் இலங்கையில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. எந்த நோக்கத்துடன் பயங்கரவாதிகள் வந்துள்ளார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே கடந்த 18-ந் தேதி குஜராத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்து இருந்தது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனை காரணமாகவே தற்போது இலங்கையில் இருந்து சென்னை வழியாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்,

இந்த 4 பயங்கரவாதிகளுக்கும் தமிழ் மட்டுமே பேச தெரிவித்துள்ளது. மேலும் இவர்களிடம் தமிழ் தெரிந்த அதிகாரிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரிணையில், பயங்கரவாதிகள் 4 பேரும் குஜராத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவராக திகழும் அபுபக்கர் அல் பாக்தாதியுடன் தொடர்பில் இருந்ததும், பாஜக, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து கைபடரப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களில் பாகிஸ்தான் நாட்டின் பழங்குடியின முத்திரை இருந்ததாகவும், தாக்குதல் சதி திட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri lankan tamil militants arrest Gujarat Airport 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->