தனுஷ்கோடிக்கு அகதியாக வந்த இலங்கை நபர்.!
srilangan migrants rescue in dhanushkodi
தனுஷ்கோடிக்கு அகதியாக வந்த இலங்கை நபர்.!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனுஷ்கோடிக்கு அதிகளவில் வருகின்றனர்.
அந்த வகையில், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் நேற்று முன்தினம் இரவு இலங்கை மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக படகில் புறப்பட்டு, தமிழகத்தில் உள்ள தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் வந்திறங்கினார்.
இதையறிந்த போலீசார் விரைந்துச் சென்று ரவிச்சந்திரனை மீட்டு மண்டபம் முகாமில் தங்க வைத்தனர். அதன் பின்னர் போலீசார் தெரிவித்ததாவது; "இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு மனைவி மற்றும் குழந்தையுடன் ராமேஸ்வரத்திற்கு அகதியாக வந்து புதுக்கோட்டை முகாமில் தங்கி இருந்தார்.
அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு இலங்கைக்குப் புறப்பட்டு அங்கிருந்து சவுதி அரேபியாவிற்கு சென்றார். இதைத்தொடர்ந்து அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு திரும்பினார்.
தற்போது இவர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வேலையில்லாமல் தவித்து, அகதியாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளார்" என்றுத் தெரிவித்துள்ளனர்.
English Summary
srilangan migrants rescue in dhanushkodi