700 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - கடற்படைக்கு அமித்ஷா வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உளவுத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட தகவலின் பேரில், சாகர் மந்தன் 4 என்ற பெயரில் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தேடுதல் வேட்டையின் போது, சந்தேகத்திற்குரிய வகையில் படகு ஒன்று கடற்படையால் அடையாளம் காணப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டது.

அதன்பிறகு அந்த படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 700 கிலோ மெத்தாம்பெட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டு, கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையை தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்திய கடற்படை மற்றும் குஜராத் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு படை ஆகியவை இணைந்து மேற்கொண்டன.

700 கிலோவுக்கும் அதிகமான மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த பாதுகாப்பு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளதாவது:- 

"போதையில்லா பாரதத்திற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையைப் பின்பற்றி, இன்று நமது ஏஜென்சிகள் ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து, குஜராத்தில் சுமார் 700 கிலோ கடத்தல் மெத்தபெட்டமைனை கைப்பற்றியுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister amitsha wishes to gujarat police for 700 kilo drugs seized


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->