சமூக நலத்துறையின் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy in social welfare department in coimbatore
கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலத் துறையில் உள்ள ஒன் ஸ்டாப் சென்டரில் காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிக ஒப்பந்த முறையில் பணியாற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரத்தை காண்போம்.
கல்வித்தகுதி : பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கோவையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
வயது:- இப்பணிகளுக்கு 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : கேஸ் பணியாளருக்கு மாதம்தோறும் 18 ஆயிரம் ரூபாயும், செக்யூரிட்டிக்கு மாதம்தோறும் 12 ஆயிரம் ரூபாயும், உதவியாளருக்கு மாதம்தோறும் 10 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்படவுள்ளது.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.coimbatore.nic.inஎன்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த வேலைவாய்ப்புக் குறித்த விவரங்களை இந்த இணையதளத்தின் மூலமாகவோ அல்லது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பழைய கட்டடத்தில் உள்ள சமூக நலத் துறை அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
English Summary
job vacancy in social welfare department in coimbatore