கோரிக்கை ஏற்று கால அளவை நீட்டித்த பணியாளர்கள் தேர்வாணையம்!
Ssc cgl exam can apply online till 13th October
வரும் 13ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசுத் துறைகளில் உயர் பணியிடங்களுக்கான தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் தேசிய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன இந்த தேர்வு ஆங்கிலத்திலும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சை உண்டாக்கியது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் "பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது" என தனது கண்டனங்களை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணையதளமானது சர்வர் கோளாறு காரணமாக செயல்படாமல் இருந்தது. பல்வேறு தரப்பில் இருந்தும் விண்ணப்பிக்கும் காலக்கெடுவை 2 அல்லது 3 நாட்கள் நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
ஆன்லைன் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்ற நிலையில் பணியாளர்கள் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விண்ணப்பிக்கும் தேதியை 5 நாட்கள் நீட்டித்து வரும் 13ஆம் தேதி இரவு 11 மணி வரை கால அவகாசம் வழங்கி உள்ளது.
English Summary
Ssc cgl exam can apply online till 13th October