மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தியின் சிலை !! - Seithipunal
Seithipunal


இந்தியா அமைதிக்கும் ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிக்கும் படி, பீகார் மாநிலம் கயா நகரில் மகாத்மா காந்தியின் சிலையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேதப்படுத்தியதைத் தொடர்ந்து பதற்றம் நிலவியது. இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டு பிடிக்க போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

நேற்று காலை மாவட்டத் தலைமையகத்தில் உள்ள பைராகி பகுதியில் வசிக்கும் சிலர் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டபோது, அங்கே அருகில் குடியிருப்பாளர்கள் உடனடியாக வார்டு கவுன்சிலர் கோபால் பாஸ்வானைத் தொடர்பு கொண்டனர், அவர் உள்ளூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். மகாத்மா காந்தியின் சிலை கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்திற்கு அருகில் இருப்பதாக பாஸ்வான் கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.  காவல் துறை உள்ளூர் கட்டிடங்களில் இருந்து சிசிடிவி காட்சிகளைப் பெற முயற்சி செய்தது. சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளம் கண்டறியப்படும். அப்பகுதியில் வசிக்கும் சிலரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று  காவல் துறை விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார்.

தற்போது அந்த சிலையின் மூக்கு, முகம் மற்றும் காது ஆகியவை மோசமாக சேதமடைந்துள்ளதாக வார்டு கவுன்சிலர் கோபால் பாஸ்வான் தெரிவித்தார். குற்றவாளிகளின் நோக்கம் தெளிவாக உள்ளது. அவர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக சிலையை அந்த இடத்திலிருந்து அகற்ற எண்ணினர். இன்னும் சில நாட்களில் எல்லாம் தெளிவாகிவிடும் என்று வார்டு கவுன்சிலர் கோபால் பாஸ்வான் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள கதர்மால் கிராமத்தில் டாக்டர் பிஆர் அம்பேத்கர் சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

statue of gandhi was vandalised by anonymous persons


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->