பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி..திணறும் முதலீட்டாளர்கள்!
Stock markets fall sharply. Stuttering investors!
இந்திய பங்குச் சந்தையில் இன்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், எஸ்.பி.ஐ., இந்துஸ்தான் யுனிலிவர், பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன.இந்தநிலையில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 856.65 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இந்திய பங்குச் சந்தையான நிஃப்டி 242.55 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
மேலும் மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் நேற்று சென்செக்ஸ் 75,311.06 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை வர்த்தகம் சென்செக்ஸ் 567.62 புள்ளிகள் சரிந்து 74,893.45 புள்ளிகளுடன் தொடங்கியது. அதன்பின் சற்று ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. இதையடுத்து இறுதியாக 856.66 புள்ளிகள் சரிந்து 74,454.41 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று அதிகபட்சமாக 74,907.04 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 74,387.44 புள்ளிகளிலும் வர்த்தகமானது என்றும் இதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் சரிவுடன் தொடங்கி, சரிவுடன் முடிவடைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல இந்திய பங்குச் சந்தை நேற்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 22,795.90 புள்ளிகளுடன் நிறைவடைந்தது என்றும் இன்று காலை 188.4 புள்ளிகள் சரிந்து 22,607.50 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது என்றும் ஆனால் இன்று அதிகபட்சமாக 226,68.05 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 22518.80 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக 243.40 புள்ளிகள் சரிந்து 22,552.50 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், எஸ்.பி.ஐ., இந்துஸ்தான் யுனிலிவர், பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் சரிவை சந்தித்தன என்றும்
ஐ.டி.சி., கோடக் மகிந்திரா வங்கி, மாருதி சுசுகி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே இந்தியா பங்குகள் ஏற்றம் கண்டன என தெரிவிக்கப்படுள்ளது.
English Summary
Stock markets fall sharply. Stuttering investors!