ஆன்மீக சுற்றுலா வந்த மாணவி.! குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் ஆன்மீக சுற்றுலா வந்த மாணவி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த கோரலுக்குண்டா பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சங்கரபாணி. இவரது மனைவி சுசிலா. இவர்களது மகள் கீர்த்தனா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சங்கரபாணி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் உட்பட 34 பேர் ஆன்மீக சுற்றுலா சென்றனர். இதையடுத்து நேற்று மாலை திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு சென்ற அவர்கள், கோவிலுக்கு அருகே உள்ள நளன் தீர்த்த குளத்தில் குளித்துள்ளனர்.

அப்பொழுது சிறுமி கீர்த்தனா, எதிர்ப்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student falls into pool and dies in Puducherry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->