திடீரென இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை - மாணவர்களின் கதி என்ன?
students injured for school building roof collapse in gujarat
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகர் வகோடியா சாலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மதியம் உணவு இடைவேளை நேரத்தில் வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருந்தபோது, வகுப்பறையின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் சில மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து உடனே தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் பள்ளிக்கு விரைந்துச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து பள்ளி முதல்வர் தெரிவித்ததாவது:- "ஒரு பயங்கர சத்தம் கேட்டது. உடனடியாக அங்கு ஓடிச்சென்று பார்த்தோம். அப்போது சுவர் இடிந்து கீழே விழுந்ததில் ஒரு மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்தது.
நாங்கள் உடனடியாக மற்ற மாணவர்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினோம். மாணவர்களின் சைக்கிள்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சுவர் விழுந்தது. இந்த விபத்தில் பல சைக்கிள்களும் சேதமடைந்தன" என்றுத் தெரிவித்தார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
English Summary
students injured for school building roof collapse in gujarat