சிலிண்டர் வாங்கினால் மானியம் நிச்சயம் - மாநில அரசு அதிரடி அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


சிலிண்டர் வாங்கினால் மானியம் நிச்சயம் - மாநில அரசு அதிரடி அறிவிப்பு.! 

மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடப்பாண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அந்தந்த மாநில அரசுகளும், மத்திய பாஜக அரசும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. அந்த வரிசையில், மத்தியப்பிரதேச மாநில அரசு சிலிண்டருக்கான மானியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் பதிவு செய்தவர்கள் மற்றும் முதலமைச்சர் லட்லி பஹ்னா யோஜனா திட்டத்தின் கீழ் தங்கள் பெயர்களில் எரிவாயு இணைப்புகளை பதிவு செய்திருக்கும் அனைத்து நுகர்வோரும் இந்த திட்டத்தின் கீழ் பலனடைவார்கள். 

சிலிண்டருக்கான மீதமுள்ள தொகை செப்டம்பர் 1, 2023 முதல் தகுதியான இணைப்பு வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும். தகுதியுள்ள நுகர்வோர் ஒவ்வொரு சிலிண்டர் மறு நிரப்பலுக்கும் மானியத்தைப் பெறுவார்கள். 

தகுதியான நுகர்வோர் சந்தை விலையில் எண்ணெய் நிறுவனத்திடமிருந்து சிலிண்டரை வாங்கிக் கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் மானியம் நுகர்வோரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Subsidy for buy cylinder in madhya pradesh state government announce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->