இந்திய ராணுவத்திற்கு வந்த புதிய தற்கொலைப் படை ட்ரோன் - "நாகாஸ்திரா - 1"
Suicidic Drones Named Nagasthira 1 Enters in Indian Army
முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நாகாஸ்திரா - 1 ட்ரோன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்த நாகாஸ்திரா ட்ரோன்களை மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த சோலார் இண்டஸ்ட்ரீஸ் எகனாமிக்ஸ் எஸ்பிளோசிவ்ஸ் (EEEL) என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நாகாஸ்திரா - 1 ட்ரோன் ஆனது எதிரிகளின் இலக்கை மிக துல்லியமாக தாக்கி அழிக்க கூடிய வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த நாகாஸ்திரா - 1 ட்ரோன் ஆனது தற்கொலைப்படை வகையைச் சேர்ந்தது. இந்த ட்ரோன் எதிரிகளின் பயிற்சி முகாம்கள், மேலும் அவர்களின் ஊடுருவல்களை மிக துல்லியமாக தாக்கி அழித்து, அதன் மூலம் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய ராணுவம் EEEL நிறுவனத்திடம் மொத்தம் 480 ட்ரோன்களை ஆர்டர் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அவற்றில் 120 ட்ரோன்களை மட்டும் அந்த நிறுவனம் தற்போது ராணுவத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிகிறது.
இதையடுத்து இந்த நாகாஸ்திரா - 1 என்ற 9 கிலோ எடையுள்ள ட்ரோன்களை மனிதர்கள் எளிதாக தூக்கி செல்லும் வண்ணம் உருவாக்கப் பட்டுள்ளது. மேலும் இது வானில் 30 நிமிடங்கள் வரை பறந்து, 30 கி. மீ தூரத்தில் உள்ள இலக்கை எளிதாக தாக்கி அழிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நாகாஸ்திரா - 1 ட்ரோன் ஆனது வானில் சுமார் 200 மீ உயரம் வரை பறக்கும் என்றும் கூறப்படுகிறது.
English Summary
Suicidic Drones Named Nagasthira 1 Enters in Indian Army