"மகள் கடன்சுமை அல்ல" - தந்தைக்கு அறிவுரை கூறிய உச்ச நீதிமன்றம்.!
supreme court advice to father and daughter
மக்களுக்கு தந்தை அளிக்க வேண்டிய பராமரிப்புச் செலவு குறித்த ஒரு வழக்கில், "மகள் கடன்சுமை அல்ல" என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
விவாகரத்துக்குப் பின் மகளுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாயும், மனைவிக்கு 400 ரூபாயும் அளிக்க வேண்டும் என்ற நீதிமன்றம் உத்தரவை அந்த நபர் நிறைவேற்றவில்லை என்று, கடந்த 2020-ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.
இதனை விசாரணை செய்த நீதிமன்றம், இரண்டு வாரத்தில் மனைவி மற்றும் மகளுக்கு ரூ.2.50 லட்சம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பின்னர், இந்த வழக்கு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்த போது, மனைவி இறந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துபோது. "படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அப்பாவை சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது" என்று மனுதாரர் ஆன மகளுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்.
மேலும், "அப்பாவும் மகளும் பேசிக் கொள்ளுங்கள். வரும் ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் மகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்" என்று தந்தைக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
English Summary
supreme court advice to father and daughter