பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!! தமிழக அரசுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்..!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் கடந்த 1992 ஆம் ஆண்டு துப்புரவு பணியாளராக ஒருங்கிணைந்த ஊதியம் அடிப்படையில் அரசு பள்ளியில் பணிக்கு சேர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் அவரது சேவை முறைப்படுத்தப்பட்ட பிறகு 2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். பணி ஒழுங்குப்படுத்துவதற்கு முன்பு உள்ள சேவையை கணக்கில் கொண்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அவர் பள்ளி கல்வித்துறையில் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் தமிழக அரசு ஓய்வூதிய பலனை வழங்க மறுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஓய்வூதிய பலன் வழங்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு "ஒரு துப்புரவு தொழிலாளர் தனது ஓய்வூதிய உரிமைகளை பெறுவதற்காக ஏற்கனவே பல வழக்குகளை சந்தித்துள்ளார்.

தேவையில்லாமல் ஒரு துப்புரவு தொழிலாளியின் ஓய்வூதிய உரிமைகள் தொடர்பான விஷயத்தில் பணியாளரை மேலும் வழக்குகளுக்குள் இழுத்துச் செல்ல தமிழக அரசு முயல்கிறது" என கண்டனம் தெரிவித்தார். 

மேலும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த அபராத தொகையை உச்சநீதிமன்ற பணியாளர்கள் நல சங்கத்திற்கு நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு செலுத்த வேண்டும். இந்த அபராத தொகையை தேவையற்ற அற்பமான வழக்குகளை தொடர அனுமதி அளித்த அதிகாரிகளும் இருந்து தமிழக அரசு தேவைப்பட்டால் வசூலித்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court condemns TN School education department fined Rs.1 lakh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->