உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான சட்டப்பிரிவில் திருத்தம் ஏன்.! மத்திய அரசு தரப்பில் வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான சட்டப்பிரிவில் திருத்தம் செய்ததன் படி ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கு ஆறு மாதங்களுக்கு வாடகை இல்லாமல் வீடு மற்றும் ஓராண்டிற்கு பாதுகாப்பு வசதி வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான சட்டப்பிரிவு, 1959-ல் திருத்தம் செய்துள்ளது. இதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுபெறும் நாளிலிருந்து ஓராண்டுக்கு வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஒருவரை அரசுச் செலவில் அமர்த்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை வெளியிட்டிருக்கும் திருத்தம் குறித்த அறிக்கையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெறுவோருக்கு ஆறு மாதங்களுக்கு வாடகை இல்லாமல் மாளிகை வீடு மற்றும் ஒரு ஆண்டுக்கு 24x7 நேரமும் பாதுகாப்பு வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, வருகின்ற ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஓய்வுபெறவிருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு  ஆறு மாதங்களுக்கு வாடகை இல்லாமல் வீடு மற்றும் ஓராண்டிற்கு பாதுகாப்பு வசதி வழங்கப்பட உள்ளது. இந்த வசதிகள் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும்  வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court judges Free Home Information central government


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->