நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி.!
supreme court order not justified neet exam cancelled
இந்தியாவில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள்கள் கசிய விடப்பட்டதாகவும், முறைகேடாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வட மாநிலங்களில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வை ரத்து செய்யும் அளவுக்கு போதிய முகாந்திரம் இல்லை. மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது இல்லை. ஐஐடி மெட்ராஸ் அளித்துள்ள அறிக்கையை நாங்கள் ஆய்வு செய்து இருக்கிறோம்" என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
English Summary
supreme court order not justified neet exam cancelled