சட்டத்தை மதிக்க வேண்டாமா? - தமிழக அரசை ரவுண்டு கட்டிய உச்சநீதிமன்றம்.!!
Supreme court questioned TNGovt on sand quarry Edraid
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் இயங்கி வந்த மணல் குவாரியில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மணல் குவாரி அதிபர்கள் வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் படி மாவட்ட ஆட்சியருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது நான் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. குறிப்பாக அமலாக்கத் துறைக்கு எதிராக எப்படி மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்?
நாடாளுமன்றத்தின் சட்டத்தை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டாமா? என எழுப்பிய கேள்விக்கு தமிழ்நாடு அரசின் ஒரு பகுதியாக உள்ள மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என தமிழக அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
மேலும் சட்டவிரோத மணல் விற்பனையை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லாத போது எப்படி சம்மன் அனுப்ப முடியும்?
சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யாத போது அமலாக்கத் துறை பண மோசடி தடுப்பு சட்டத்தின் எந்த பிரிவில் தகவல் கோர முடியும்? தமிழ்நாடு அரசு முன் வைத்த வாதத்திற்கு சட்டத்தை அரசு மதிக்க வேண்டாமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
Supreme court questioned TNGovt on sand quarry Edraid