தேர்தல் பத்திரம் விவகாரம் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு! - Seithipunal
Seithipunal


தேர்தல் பத்திரம் விவகாரம் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு தேர்தல் பத்திரம் என்ற முறையை அறிமுகப்படுத்தியது. இந்த பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு யார் வேண்டுமானாலும் எவ்வளவு நிதி வேண்டுமானாலும் வழங்கலாம். இத்தனை நாள் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு நிதி வழங்கப்படுகிறது.

இதனால் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தொழிலதிபர்கள் நிதி உதவி செய்கின்றனர். எவ்வளவு நிதி வழங்கப்பட்டது. உள்ளிட்ட தகவல்களை வாக்காளர்களால் பெற முடியாது என்பது தேர்தல் பத்திரத்தில் குறிப்பிட்டு உள்ளது.

இந்த நிலையில் அது தொடர்பாக வெளிப்படை தன்மையை வாக்காளர்களுக்கு தெரிவிக்கும் உரிமையை மீறுவதாக இந்த சட்டம் உள்ளதாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்தது. தேர்தல் ஆணையம் விவரங்களை பதிவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் அது தொடர்பாக வழக்கு என்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் தொழிலதிபர்கள் கட்சிகளுக்கு தேர்தல் நிதி வழங்கி உள்ளனர். அதற்கு அரசியல் கட்சிகள் அந்த நிறுவனங்களுக்கு ஏதாவது கைமாறாக செய்ய வாய்ப்புள்ளது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நாங்கள் விவரங்களை வெளியிட உத்தரவிட்டிருந்தோம். நாங்கள் விசாரணையில் ஒரு கட்டத்திற்கு பிரதான திட்டத்தை ரத்து செய்துள்ளோம்.தற்போது சிறப்பு விசாரணை குழு என்ன விசாரிக்க போகிறது சட்ட தீர்வுகள் இருக்கும் நாம் சிறப்பு விசாரணைக் குழுவை நியமிக்கலாமா? 

இதில் நீதிமன்றம் தலையிடுவது முன்கூட்டியே மற்றும் பொருத்தம் மாட்டதாக இருக்கும் ஏனெனில் சட்டம் மூலமாக கிடைக்கக்கூடிய தீர்வுகள் தோல்வி அடைந்த பிறகு தலையீடு தொடர வேண்டும் என்று தெரிவித்து அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court refused to set up a special investigation committee on the election bond issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->