தமிழக தொழில் அதிபரை டெல்லியில் வைத்து கடத்திய மர்ம கும்பல் கைது.!  - Seithipunal
Seithipunal


டெல்லி விமான நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட தமிழக தொழிலதிபரை, ஹரியாணா போலீஸார் மீட்டுள்ளனர். 

தமிழகம் : திண்டுக்கல் மாவட்டம், சென்னம நாயக்கன்பட்டியை சேர்ந்த தொழிலதிபர்  கே.எஸ்.வில்வபதி (வயது 56), கடந்த தொழில் சம்மந்தமாக ஜூன் 5-ஆம் தேதி, தனது கணக்காளர் வினோத் குமாருடன் (வயது 28) டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த அன்று மாலை 6 மணிக்கு டெல்லி விமான நிலையம் சென்ற வில்வபதி, கணக்காளர் வினோத்குமாரை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்றுள்ளது.

பின்னர் அந்த கும்பல், வில்வபதி, கணக்காளர் வினோத்குமாரை ஹரியாணாவின் குருகிராமில் உள்ள ஒரு வீட்டில் கட்டி வைத்து மிரட்டி 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். 

பணத்துக்காக வில்வபதி தனது மேலாளர் சண்முகவேலை போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சண்முகம், திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனடியாக தமிழக போலீசார். ஹரியாணா எஸ்டிஎப் ஐஜி சதீஷ் பாலனிடன் உதவி கேட்டனர். இதற்கிடையே, குருகிராமில் உள்ள வில்வபதியின் குடும்ப நண்பருமான பெருமாள் என்பவருடன் கடத்தல் கும்பல் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது போலீசார் அறிந்தனர். 

உடனடியாக திட்டம் ஒன்றை தீட்டிய போலீசார். டெல்லி ஆர்.கே.புரத்திலுள்ள மலைமந்திர் இடத்தில பணத்தை பெற்றுக்கொள்ளும்படி  கடத்தல் கும்பலை வரவழைத்து, அவர்களிடம் பணத்தை கொடுப்பது போல் நடித்து, நாடகமாடி கடத்தல் கும்பலை போலீஸார் கைது செய்தனர். 

மேலும், வீட்டில் இருந்து வில்வபதி, வினோத்குமார் ஆகியோரை மீட்டனர். இந்த கடத்தலில் சென்னையை சேர்ந்த சிவக்குமார் (ஜிர்வானி பாபு), மேற்குவங்க மாநிலத்தின் ஆசீப் உசேன், முகம்மது கரீம், சோனு, முகம்மது ஆஸாத் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu industrialist abducted in Delhi gang arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->