இன்று காஷ்மீர் செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.!! - Seithipunal
Seithipunal


இன்று காஷ்மீர் செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.!!

தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன் தினம் நாட்டின் தலைநகரான டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் நான்கு நாட்கள் தங்கியிருந்து தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்து மேலிடத்திற்கு தகவல் தெரிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. 

அதிலும் குறிப்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி குறித்து அவர் மேலிடத்தில் விவாதிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு பரிந்துரை செய்த நிலையில், அதனை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டார். 

இருப்பினும், தமிழக அரசு செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அரசாணை வெளியிட்டது. இது தொடர்பாக டெல்லியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவார் என தெரிவிக்கப்பப்பட்டது. 

மேலும், அவர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.  இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அங்கு உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் கலாசார விழாவில் கலந்துகொண்டு, பின்னர் டெல்லி திரும்பும் ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக அங்கிருந்து சென்னைக்கு புறப்படுவார் என்று தெரிகிறது.
 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu governor RN ravi going to kashmeer from today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->