அரசு பள்ளியில் டீ, பகோடா தயாரிக்கும் தொழில் பயிற்சி - எந்த மாநிலத்தில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், ‘கற்றுப் பார்’ எனும் பெயரில் ஒரு புதிய தொழில் கல்வித் திட்டம் அமலாக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியுடன் பக்கோடா சுடுவது, தேநீர் தயாரிப்பது எப்படி என்பது உள்ளிட்டவற்றை கற்றுத் தர உள்ளனர். 

அதுமட்டுமல்லாமல், வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டுவது, பழரசங்கள் தயாரிப்பது, விவசாயம் மற்றும் தச்சு உள்ளிட்ட தொழில்களும் கற்றுத்தர உள்ளனர். இந்தத் திட்டம் மாணவர்களின் எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தத் திட்டம் முதல் கட்டமாக 26 பள்ளிகளில் அமலாக்கப்பட்டுள்ளது. 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும் இந்த பயிற்சிக்காக மாநில அரசின் சார்பில் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.28,770 செலவுத் தொகையாக அளிக்கப்படுகிறது. 

இதில் முதல்கட்டமாக 26 பள்ளிகளில் சுமார் பத்து பள்ளிகள் பக்கோடா சுடுதல், தேநீர் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை மாணவர்களுக்காகத் தொடங்கி விட்டன. மீதமுள்ள பள்ளிகளும் இந்த பயிற்சியை தொடங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tea and bakoda training to students in up government schools


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->