குளிக்க சென்ற இளம்பெண்ணை குண்டு கட்டாக தூக்கி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்..கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?  - Seithipunal
Seithipunal


குளிக்க சென்ற இளம்பெண்ணை தன்னுடைய வீட்டுக்குள் குண்டு கட்டாக தூக்கி சென்று  பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஊர்மக்கள் ஒன்றுகூடி தர்ம-அடி கொடுத்து பிடதி போலீசாரிடம் ஒப்படைத்தார்கள். 

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதி பகுதில் வசித்து வருபவர் இளம்பெண் ஒருவர். 20 வயதான இந்த இளம்பெண் பிடதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒரு லே-அவுட்டில் வசித்து வருகிறார். அதேபோல் இந்த இளம்பெண் வீட்டின் அருகேயே அசாம் மாநிலத்தை சேர்ந்த மன்சூர் ஆலம் என்ற 24 வயது வாலிபர் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் தன்னுடைய வீட்டின் பின்புறம் உள்ள குளியலறைக்கு அந்த இளம்பெண் குளிப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் குளித்து விட்டு வெளியே வரும் சந்தர்ப்பத்தில் அங்கு வந்த மன்சூர் ஆலம், இளம்பெண்ணை தன்னுடைய வீட்டுக்குள் குண்டு கட்டாக தூக்கி சென்று தன்னுடைய வீட்டில் வைத்து இளம்பெண்ணை அவர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்து பார்த்தனர்.

உடனடியாக உடனே வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடிச் செல்ல முயன்ற மன்சூர் ஆலமை அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம-அடி கொடுத்து பிடதி போலீசாரிடம் ஒப்படைத்தார்கள். மேலும் அவரை போலீசார் கைது செய்தார்கள். இதற்கிடையில், பலாத்காரத்திற்கு உள்ளான பெண் ரத்த காயங்களுடன் இருந்த அவரை பெண் போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்  விசாரணையில், மன்சூர் ஆலம் ராமநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தது தெரியவந்தது. கைதான மன்சூர் ஆலம் மீது பிடதி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பிடதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teenage girl raped by man while she was taking a bath Do you know what happened in the end?


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->