அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயம் - தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு!
Telangana all school Telugu in must
தெலங்கானா மாநில அரசு அனைத்து வகையான பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கியுள்ளது.
2018ஆம் ஆண்டு, தெலுங்கு மொழியை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இது முழுமையாக நடைமுறைப்படவில்லை.
தற்போது, தேசிய கல்விக் கொள்கையில் (NEP) மும்மொழி விதி தொடர்பாக விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், மாநில கல்வித் துறை தெலுங்கு மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் செயல்படும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி போன்ற அனைத்து பாடத்திட்டங்களின் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயமாகலாம்.
2025-26 கல்வியாண்டு முதல், 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தெலுங்கு மொழியை கற்க வேண்டும். வெளிமாநிலத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு தெலுங்கு மொழியைக் கற்றுக்கொள்ளும் வசதியாக பாடத்திட்ட மாற்றங்கள் செய்யப்படும்.
இந்த முயற்சி மாநில மொழியை பாதுகாக்கும் வகையில் முக்கியமானதாக அமையும் என அம்மாநில கல்வித் துறை தெரிவித்துள்ளது.
English Summary
Telangana all school Telugu in must