அதிர்ச்சி வீடியோ! குப்பை தொட்டியில் வெடிகுண்டா? வெடித்து சிதறி பலியான துப்புரவு பணியாளர்!
Telangana Hyderabad Dustpan explosion
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள குசாய்குடா பகுதியில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட மர்ம வெடிப்பில் 37 வயது துப்புரவு பணியாளர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்புரவு பணியாளராக பணியாற்றிய எஸ். நாகராஜு, சாலையோர மின்கம்பம் அருகே இருந்த குப்பைத் தொட்டியில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்த போது திடீரென பெயிண்ட் டப்பா வெடித்தது. காலாவதியான ரசாயனங்கள் அதில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வெடிப்பின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், நாகராஜு பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். இதில் கடுமையாகக் காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த திடீர் வெடிவிபத்து அருகிலுள்ள கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதைப் பொருத்தே, போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நகரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Telangana Hyderabad Dustpan explosion