நாகர்ஜுனாவின் கட்டிடத்தை அடியோடு இடித்து தரைமட்டமாக்கிய தெலுங்கானா போலீஸ்!
Telangana police completely demolished Nagarjunas building
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மாதப்பூரில் நடிகர் நாகார்ஜுனா இடம் வாங்கி போட்டு அங்கு என் கன்வின்சன் என்ற பெயரில் பெயரில் கட்டிடத்தை கட்டியிருந்ததார். இந்த கட்டிடத்தை ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் இன்று இடித்து அகற்றியுள்ளனர்.
மாதாப்பூரில் உள்ள தம்மிடி குந்தா ஏரியின் நிலத்தில் இருந்து சுமார் 3.30 முதல் 3.40 ஏக்கர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து நடிகர் நாகார்ஜுனா மண்டபம் கட்டியிருந்தாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக பாஸ்கர் ரெட்டி உள்பட பலர் புகார் அளித்திருந்தனர்.
மேலும் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து தம்மிடி குந்தா ஏரி சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திய அதிகாரிகள் கட்டிடத்தை இடித்து அகற்ற முடிவு செய்தனர்.
அதன்படி காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன், ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிடத்தை இடித்தனர். சர்ச்சைக்குள்ளான என் கன்விக்சன் மண்டபம் அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. மொத்தம் மூன்று கல்யாண மஹால்கள் இருந்தன. இங்கு திருமணம், நிச்சயதார்த்தம், குடும்ப விழாக்கள் மற்றும் அரசியல் கட்சி நிகழ்வுகள் நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Telangana police completely demolished Nagarjunas building