ஓரினச் சேர்க்கை ஜோடிகளை பிரிக்க கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவருக்கும் ஓரினச்சேர்க்கை ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வந்தனர்.

இதையறிந்த 27 வயது இளம் பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த இளம்பெண்ணை அவருடைய ஜோடியிடம் இருந்து பிரித்து வீட்டில் தனியாக அடைத்து வைத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த 25 வயது இளம்பெண் தெலுங்கானா மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில் தனது 27 வயது துணையை அவரது தந்தை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். உடனே உயர்நீதிமன்றம் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு பெண்ணின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், அந்த பெண்ணை தங்கள் முன் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

அதன் படி போலீசார் 27 வயது இளம்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 2 பெண்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஒன்றாக வாழ விரும்புவதை மீண்டும் வலியுறுத்தினர். இதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் ஓரினச்சேர்க்கை ஜோடி ஒன்றாக வாழ அனுமதி வழங்கினர். தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையில் தலையிட வேண்டாம்.

இரு பெண்களும் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் விருப்பத்தின்படி வாழ சுதந்திரம் உள்ளது. தேவைப்பட்டால் தம்பதியருக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கும் உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telungana high court order no separated same gender couples


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->