திடீரென பள்ளத்தில் பாய்ந்த வேன் - பயணிகளின் கதி என்ன?
ten peoples died and 13 peoples injured van accident in uttarkant
நாட்டின் தலைநகர் டெல்லியைச் சேர்ந்த 26 பேர் வேனில் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதன் படி இவர்கள் உத்தரகாண்ட்டின் ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் சறுக்கிக்கொண்டு அலக்நந்தா ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும்,13 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
English Summary
ten peoples died and 13 peoples injured van accident in uttarkant