பயங்கரம் - டிராக்டர் மீது லாரி மோதி 10 பேர் பலி.!
ten peoples died for accident in uttar pradesh
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மிர்சாபூரில் இன்று அதிகாலை வேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 3 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு வாரணாசியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைவுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்தச் சம்பவம் குறித்து காவல் அதிகாரி தெரிவித்துள்ளதாவது:- "டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உயிரிழந்த தொழிலாளர்கள் ராம்சிங்பூர், மிர்ஜாமுராத் கிராமங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். காயமடைந்த 3 பேரும் அதே கிராமங்களை சேர்ந்தவர்கள்" என்றுத் தெரிவித்துள்ளனர்.
English Summary
ten peoples died for accident in uttar pradesh