சிறுவன் புத்தகப் பையில் துப்பாக்கி! பள்ளியில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


துப்பாக்கியை விளையாட்டுப் பொருள் என நினைத்து பையில் வைத்து கொண்டு வந்த சிறுவன்.

டெல்லி நஜப்கர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரத் தொடங்கினர்.

அப்பொழுது ஒரு மாணவன் பள்ளிக்கு தயக்கத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தான். இதைக் கண்ட பள்ளி நிர்வாகத்தினர், அந்த மாணவனை அழைத்து. அவன் வைத்திருந்த புத்தகப் பையை சோதனையிட்டனர். அந்தப் பையில் புத்தகங்களுக்கு பதிலாக துப்பாக்கி இருப்பதைக் கண்டு மிரண்டனர்.

பள்ளி நிர்வாகத்தினர் உடனே உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் துப்பாக்கியை வாங்கி பரிசோதித்து பார்த்தனர். துப்பாக்கியை விளையாட்டுப் பொருள் என நினைத்து அதை கொண்டு வந்ததாக மாணவன் கூறினான்.

போலீசார் துப்பாக்கியைப் பறிமுதல் செய்த உடனே அதற்கான உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த விசாரணையில், அந்த துப்பாக்கி மாணவனின் தந்தைக்குச் சொந்தமானது என்பதும், அவரது பெயரில் உரிமம் வாங்கப்பட்டுள்ளதும், சில மாதங்களுக்கு முன் மாணவனின் தந்தையார் காலமானதும் தெரிய வந்தது.

பள்ளிக்கு புத்தகப் பையில் துப்பாக்கி கொண்டு வந்த மாணவனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The boy who brought the gun in the book bag Shock at school


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->