தாலிகட்டும் நேரத்தில் மணமகளின் தந்தை மரணம்; நிறுத்தப்பட்ட திருமணம்..! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், பிக்கனூர் அடுத்த ராமேஸ்வர பள்ளியை சேர்ந்த 55 வயதுடையவர்  பால் சந்திரம். இவர் காம ரெட்டியில் பகுதியில் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு 02 மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில், மூத்த மகள் கனக மகா லட்சுமிக்கும் பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் மாலை ஜங்கம்பள்ளி புறநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாட்டுக் கச்சேரி, ஆடல், பாடல் என திருமண மண்டபமே உறவினர்கள் நண்பர்கள் என திரண்டு களைக்கட்டி இருந்தது.

இந்நிலையில், நேற்று காலை தாலி கட்டும் முன்பாக திருமண மகளை கன்னிகாதானம் செய்யும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது பால் சந்திரம் தனது மகளின் கையை பிடித்து மணமகனிடம் ஒப்படைத்துள்ளார்.

அந்த நேரத்தில் திடீரென பால் சந்திரம்  மயங்கி கீழே விழுந்த்துள்ளார். இதனைக் கண்டு மண்டபத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து,  அவரை மீட்டு சிகிச்சைகாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் பால் சந்திரம் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்த்துள்ளார். இதன்காரணமாக திருமணம் நின்ருவிட்டது. ஆடல் பாடல் என, களைக்கட்டி இருந்த திருமண வீடு வெறிச்சோடி சோகத்தில் மூழ்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The brides father died during the talisman


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->