நீட் தேர்வு முறைகேடு குறித்து புகார் அளிக்க குழு அமைத்துள்ளது மத்திய அரசு! - Seithipunal
Seithipunal


முன்னாள் இஸ்ரேல் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில்  நீட் தேர்வு முறைகேடு புகார் அளிக்க மத்திய அரசு குழு அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தாண்டு நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இதுவரை இல்லாத அளவிற்கு 67 மாணவர்கள் 720க்கு 720 என்று முழுமதிப்பெண்ணை பெற்றது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அரியானா மாநிலத்தில் ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 7 பேர் முழுமதிப்பெண் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனையடுத்து நீட் தேர்வை  நடத்தும் தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் பாராளுமன்றத்தில் நீட் குறித்து விவாதம் நடத்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் மாணவர்களிடமிருந்து நீட் குறித்த புகார்களை\ பெற மத்திய அரசு உயர்நிலை குழு ஒன்று அமைந்துள்ளது. இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, இஸ்ரல் முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் குழு அமைக்கப்பட்டது. அரசு நிறுவனங்கள் கல்வியாளர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் குழுவில் உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The central government has set up a committee to complain about the NEET examination malpractice


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->