முட்டை சாப்பிட்ட குழந்தை பலி... நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தின் குப்பம் பகுதியில் கடந்த ஆண்டு அங்கன்வாடியில் முட்டை சாப்பிட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

ஆந்திர மாநிலத்திலுள்ள அங்கன்வாடிகளில்  குழந்தைகளுக்கு பால் மற்றும் முட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் அம்மாநிலத்தில் உள்ள அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்பட்டது. 

இதில் குப்பம் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் இந்த முட்டையை சாப்பிட்ட ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. அங்கன்வாடியில் அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவை தெரிவித்தனர்.

இறந்த குழந்தையின் பெற்றோருக்கு  எட்டு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து அங்கன்வாடி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது. இது தொடர்பாக தீர்ப்பு கூறியுள்ள நீதிமன்றம்  மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The court upheld the decision to a death of a child who ate an egg in an anganwadi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->