ஒடிசா ரயில் விபத்தில் தொடர்புடைய என்ஜினியர் தலைமறைவு.!
The engineer involved in the Odisha train accident has gone missing
கடந்த 2ம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் உள்ளிட்ட 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை ஒன்றுக்கு ஒன்று விபத்துக்குள்ளானது.இந்த கோர விபத்தில் இதுவரை 291 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்து மிகவும் மோசமான ரயில் விபத்தாக கருதப்படுகிறது. இதனையடுத்து இந்த விபத்து குறித்து சிபி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சோரா செக்சன் ரயில்வே சிக்னல் ஜூனியர் இன்ஜினியர் தலைமறையாகியுள்ளார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
கடந்த 16ஆம் தேதி பாலசோர் ரயில் நிலையம் சென்று விசாரணை நடத்தினர் அதனை தொடர்ந்து நேற்று ஜூனியர் இன்ஜினியர் வசித்து வந்த வாடகை வீட்டிற்கு சென்றபோது அவர் இல்லாததால் வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர். மேலும் சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து ஜூனியர் இன்ஜினியரிடம் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
English Summary
The engineer involved in the Odisha train accident has gone missing