துப்பாக்கியுடன் நடனமாடிய சிறை அதிகாரி பணியிடை நீக்கம்! - Seithipunal
Seithipunal


டெல்லியில் கை துப்பாக்கியுடன் நடனமாடிய திகார் சிறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் உள்ள திகார் சிறையில் கீழ் உள்ள மண்டோலி சிறையில் உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் தீபக்சர்மா. இவர் போண்டா பகுதியில் நடைபெற்ற ஒரு பிறந்தநாள் விருந்தில் பங்கேற்று உள்ளார்.

விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் விழாவில் இசைக் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இசைக் கச்சேரிக்கு பலரும் நடனமாடி கொண்டிருந்தனர்.

அப்போது விழாவில் நடிகர் சஞ்சய் தத் நடித்த கல்நாயக் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு தனது கை துப்பாக்கியுடன் சிறை உதவி கண்காணிப்பாளர் தீபக்சர்மா நடனமாடிய வீடியோ சமீபத்தில்  சமூக வலைத்தளங்களில் வெளியாகி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபக் ஷர்மா நடனம் ஆடியது மட்டுமல்லாமல் கை துப்பாக்கியை வானத்தை பார்த்து துப்பாக்கியால் சுட்டு  நடனமாடியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை எடுத்து  சிறை உதவி கண்காணிப்பாளர் தீபக்சர்மா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The prison officer who danced with the gun was fired


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->