7 பேர் பலியான சோகம்!!! ம.பி நெடுஞ்சாலையை டேங்கர் லாரி மோதிய காரணம் என்ன?
the tanker lorry to hit in MP highway cause 7 deaths
மத்திய பிரதேசம் மாநில தார் மாவட்டத்தில், பத்னாவர்- உஜ்ஜைன் நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வந்த ஒரு கார் மற்றும் ஜீப் வாகனங்கள் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியை மேற்கொண்டனர். மேலும் இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக சம்பாவ இடத்திலையே உயிரிழந்தனர்.இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களை ரத்லம் மாவட்டத்திலுள்ள மருத்துவனையில் போலீசாரால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பியோடிய டேங்கர் லாரி டிரைவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.இதில் உயிரிழந்தவர்களின் விபரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.
English Summary
the tanker lorry to hit in MP highway cause 7 deaths