டெல்லி : உதவி சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தி கொலை செய்த திருடன்.! - Seithipunal
Seithipunal


மேற்கு டெல்லியில் செல்போன் திருடன் உதவி சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கியாலா காவல் நிலையத்தில் ஜனவரி 4ஆம் தேதி, பெண் ஒருவர் தனது மொபைல் போனைத் திருடிய ஒரு நபர் குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, உதவி சப் இன்ஸ்பெக்டர் ஷம்பு தயாள்(57) தீவிரமாக செயல்பட்டு மொபைல் போனை அனீஷ் என்ற நபரை கைது செய்தார். 

இதையடுத்து அனிஷை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தபோது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் அனீஸ், உதவி சப் இன்ஸ்பெக்டரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் தொண்டை, மார்பு மற்றும் கழுத்தில் கத்தியால் குத்தியதால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து, ஷம்பு தயாள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அனீஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The thief stabbed the assistant sub inspector to death in Delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->