ஓடும் ரயிலில் பெண் காவலரிடம் செல்போனை பறிக்க முயற்சி! தராமல் போராடியதால் கீழே தள்ளிவிட்டு தப்பிய ஓடிய திருடன்.! - Seithipunal
Seithipunal


ஓடும் ரயிலில் பெண் காவலரிடமிருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்த திருடன், செல்போனை தராமல் போராடிய காவலரை ரயிலில் இருந்து தள்ளி விட்டு தப்பி சென்றுள்ளான்.

பீகார் மாநிலம் கத்திஹார் பகுதியில் ஓடும் ரயிலில் பெண் போலீஸ் காவலரிடமிருந்து திருடன் செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளான்.

ஆனால் பெண் காவலர் செல்போனை தராமல் திருடனிடம் போராடியுள்ளார். இந்நிலையில் திருடன் பெண் காவலரை ரயிலில் இருந்து தள்ளி விட்டு தப்பி ஓடி உள்ளான்.

ரயிலில் கூட்டம் குறைவாக இருந்ததால் அவனும் எளிதாக தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண் காவலர் ஆர்த்தி குமாரி, 20 நிமிடங்களுக்கு பிறகு மீட்கப்பட்டு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The thief who pushed the female guard off the train


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->