ரஷ்ய ராணுவத்தில் இணைந்த 126 பேரில்,16 இந்தியர்கள் காணோம்; மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்..! - Seithipunal
Seithipunal


''உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் இணைந்த 16 இந்தியர்களை காணவில்லை,'' என மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நிருபர்களைச் சந்தித்த அவர், ''ரஷ்ய ராணுவத்தில் 126 இந்தியர்கள் பணியாற்றியது தெரிய வந்தது. அவர்களில், 96 பேர் தாயகம் திரும்பிவிட்டனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் அங்கு இருக்கும் நிலையில், மேலும் 16 பேர் எங்கிருக்கின்றனர் என்ற தகவல் இல்லை''. என்று கூறியுள்ளார்.

கடந்த 2022 ஆ ம் ஆண்டு முதல் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் உள்ளன. போர் வீரர்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் ரஷ்யா, வெளிநாடுகளை சேர்ந்தவர்களையும் தங்கள் ராணுவத்தில் இணைத்துக் கொண்டது

இந்நிலையில், இந்தியர்கள் நூற்றுக்கணக்கானோர் ரஷ்ய தரப்பில் போரிட்டு வருவதாக தகவல் வெளியானது. இதில் மோசடி நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அவர்களில் சிலரை விடுவித்து மத்திய அரசு தாயகம் அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Union Ministry of External Affairs says that 16 Indians who joined the Russian army are missing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->