3 ஆண்டு காதல்... காதலியை கரம்பிடித்த இளைஞர்... ஆணுறுப்பை துண்டித்த பெண்வீட்டார்..! - Seithipunal
Seithipunal


காதல் திருமணம் செய்த மகனின் ஆணுறுப்பை துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியின் சாகர்பூர் பகுதியில் வசித்து வரும் 22 வயது இளைஞர் ஒருவர் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவர்கள் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.

இதனை அடுத்து, ரஜ்வரி காவல்நிலையத்திற்கு வந்த மணமகனை தூக்கி சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தினர். அப்போதும் ஆத்திரம் குறையாத அவர்கள் அந்த இளைஞரின் பிறப்புறுப்பை துண்டித்தனர்.

தற்போது, எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The woman who cut off the penis of the young man who married for love is home


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->