நகைகளை திருடிக்கொண்டு ஓடும் திருடன்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேரனுக்கு வடா பாவ் வாங்குவதற்காக இறங்கிய தம்பதியிடம் இருந்து நகைகளை திருடிக்கொண்டு ஓடும் திருடன். ஓடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், தசரத் பாபுலால் -ஜெயஸ்ரீ என்ற மூத்த தம்பதியினர் அடகுக்கடையில் இருந்து ரூ.4.95 மதிப்புடைய தங்களது தங்க நகைகளை மீட்டுக்கொண்டு வீடு திரும்பும்போது பேரனுக்கு வடா பாவ் வாங்குவதற்காக புனே -சோலாப்பூர் சாலையில் உள்ள கடை ஒன்றின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பாபுலால் வடா பாவ் வாங்கச் சென்ற நிலையில் வாகனத்தின் அருகே நின்றுகொண்டிருந்த ஜெயஸ்ரீ சற்று அசந்த நேரம் பார்த்து அவ்வழியாக வந்த ஒருவன் வண்டியின் முன்புறம் இருந்த நகைகள் அடங்கிய பையை தூக்கிக்கொண்டு ஓடினான்.

திருடனை ஜெயஸ்ரீ  துரத்தியும் பிடிக்க முடியவில்லை. போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடனைத் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையில், தங்க நகைகளை  திருடிக்கொண்டு ஓடும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thief running away stealing jewelry CCTV footage released and sensational


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->