திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடி ரூபாயா? - Seithipunal
Seithipunal


திருமலை ஏழுமலையான் கோயிலில் கடந்த வியாழக்கிழமை உண்டியல் காணிக்கை ரூபாய் 4.56 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே பழைமையும், பெருமையும் வாய்ந்த மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்த திருமலை மலைகள் தான். திருப்பதியின் பழைய பெயர் திருவேங்கடம். இந்த மலைகளை பண்டைய தமிழகத்தின் வடபுறத்து எல்லையாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மலையில் வெங்கடேஸ்வரா ஆலயம் பல்லவர், சோழர், பாண்டியர், சாளுக்கியர், விசயநகர மன்னர்களால், பல பேரரசுகளால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. 

இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கனாக பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கு பின்னர் பக்தர்கள் தாங்கள் முடிந்து வைத்த வேண்டுதல் காணிக்கைகளை கோயில் உண்டியலில் செலுத்தி வருகின்றனர். 

இவற்றை தேவஸ்தானம் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூபாய் 4.56 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thirumalai info july 2022


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->