திருநள்ளாறு சனீசுவரன் கோவிலில் முறிந்து விழுந்த கொடிமரம் - அதிர்ச்சியில் பக்தர்கள்.! - Seithipunal
Seithipunal


காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் (சனீசுவரன்) கோயில் உள்ளது. புகழ்பெற்ற சனீசுவரன் தலமான இங்கு ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நள நாராயண பெருமாள் கோயில் உள்ளது.

இந்த பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவிற்காக, ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டிருந்தனர்.

அதன் படி கொடியேற்ற விழா தொடங்குவதற்காக பூஜைகள் இன்று காலையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கொடியேற்றிய போது, திடீரென கொடிமரம் முறிந்து சேதமடைந்தது. இதனால் பிரம்மோற்சவ விழா நிறுத்தப்பட்டது.

உரிய பாராமரிப்பு இல்லாத காரணத்தால் தான், கொடிமரம் முறிந்ததாக பக்தர்கள் கோயில் நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் திருநள்ளாறு பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் திட்டமிட்ட நேரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்காதால், பக்தர்கள் வருத்தமடைந்தனர். இதையடுத்து கோயில் நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirunallar saneeswaran temple flag tree broke


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->