டெங்கு காய்ச்சல் - பெரியகுளம் அருகே 5 ஆம் வகுப்பு மாணவன் பலி.!
five years old boy died for dengue fever attack in theni
தேனி மாவட்டத்தில் உள்ள குள்ளப்புரம் ஊராட்சிக்குட்பட்ட கோபுர தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் மோகித்குமார். இவர் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் உறுதியானதால் தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், சிகிச்சையில் இருந்த மோகித்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 5 பேர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
five years old boy died for dengue fever attack in theni