திருப்பதி ஏழுமலையான் கோவில்.. ரூ.300 தரிசன டிக்கெட் விற்பனை.. இன்று காலை வெளியீடு.!
Thirupathi Elumalayan Temple September month 300 ruppes tickets from today
ஆந்திர பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், உலக பிரசித்தி பெற்ற இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுவார்கள்.
இதில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை, அங்கப்பிரதட்சணம், சிறப்பு தரிசனம் மற்றும் இலவச தரிசனத்திற்கு திருப்பதி தேவஸ்தானத்தின் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் செப்டம்பர் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து செப்டம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள், திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களுக்கு வசதியான தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்து தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Thirupathi Elumalayan Temple September month 300 ruppes tickets from today