அதிரடி காட்டும் சிபிஐ! நீட் முறைகேடு வழக்கு! முக்கிய 3 எய்ம்ஸ் மருத்துவர்கள் கைது! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக மூன்று எய்ம்ஸ் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பாக நீட் வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற நீட் தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 67 பேர் 720க்கு 720 முழு மதிப்பெண் பெற்றனர்.  

அதுமட்டுமில்லாமல்  அரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதி 7 பேர் முழு மதிப்பெண் பெற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியது. நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐக்கு மாற்றப்பட்டது. பீகார் மாநிலம் பாட்னாவில் வினாதாள் கசிந்தது தெரிய வந்தது. இதேபோல் ஜார்கண்ட், குஜராத், , உத்தர பிரதேச முதலீட்டு மாநிலங்களில் ஆள்மாறட்டம் போன்ற முறைகேடுகள் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்குகளில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உட்பட இதுவரை 12 பேர் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளிகளான என்ஜினியர் பங்கஜ்குமார், ராஜூ சிங் ஆகி வரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதுவரை நீட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 உயர்ந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மூன்று மருத்துவர்கள் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து லேப்டாப் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three AIIMS doctors arrested in connection with NEET examination malpractice case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->