சட்டவிரோதமாக சர்வதேச எல்லையை கடந்த 3 வங்காளதேச பெண்கள் கைது.! - Seithipunal
Seithipunal


இந்தநிலையில் மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக வங்காளதேசத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்காணித்து மத்திய அரசு கைது வருகின்றனர் .அந்தவகையில் சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள வடக்கு பரவூரில் சட்டவிரோதமாக வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் தங்கியிருப்பதாக எர்ணாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தவலின் பேரில் எர்ணாகுளம் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இணைந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 'ஆபரேசன் கிளீன்' என்ற பெயரில் போலீஸ் ஐ.ஜி. வைபவ் சக்சேனா தலைமையில் நடைபெற்ற இந்த வேட்டையில் வடக்கு பரவூர் பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 27 பேர் சிக்கினர். மேலும் அவர்கள், இந்திய-வங்கதேச எல்லையில் உள்ள ஆற்றின் ஆழமற்ற பகுதியை கடந்து இந்தியாவுக்குள் வந்ததும், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விட்டு தற்போது கேரளாவில் வந்து தங்கி வேலை பார்த்து வருவதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்தநிலையில் மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக வங்காளதேசத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் வங்காளதேசத்தின் டாக்காவை சேர்ந்த 3 பெண்கள், நேற்று சர்வதேச எல்லையை சட்டவிரோதமாக கடந்து இந்தியாவிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 3 பெண்களும் வேலை தேடி இந்தியாவிற்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three Bangladeshi women arrested for crossing international border illegally


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->