இலங்கைக்கு கடத்த முயன்ற 3 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்.!
three crores sea cucumber seized in keezhakarai
இலங்கைக்கு கடத்த முயன்ற 3 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்.!
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். அதில், கடல் அட்டையும் ஒன்று. அப்படிப்பட்ட இந்தக் கடல் அட்டையை வன உயிரின சட்டத்தின்படி, உயிருடனோ அல்லது பதப்படுத்தியோ வைத்திருப்பது குற்றமாகும்.
இந்த நிலையில் கீழக்கரை நத்தம் கிராமம் வையான் என்ற பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்பட உள்ளதாக வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வன உயிரின பாதுகாப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் கீழக்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கீழக்கரை வையான் பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை சிக்கியது.
மேலும், அந்தப் பகுதியில், 90 கிலோ பதப்படுத்தப்படாத அட்டையும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், இதனை பதுக்கி வைத்திருந்த நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தியச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three crores sea cucumber seized in keezhakarai