தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி ஏறி விபத்து.. 3 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஹரியானாவில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஹரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமானப் பணிக்காக உத்தரப் பிரதேசத்திலிருந்து 18 புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். 

அப்போது நிலை தடுமாறி வந்த லாரி ஒன்று தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறியது. இதில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தொழிலாளர்கள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை எச்சரிக்கும் வகையில், தடுப்புகளை அமைத்து ஒளி பிரதிபலிப்பு புறத்தையும் தங்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருந்த போதிலும் கூட இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுனர் குடிபோதையில் அல்லது தூக்க கலக்கத்தில் இருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். லாரி பதிவு எண்ணை பயன்படுத்தி உரிமையாளரை கண்டுபிடித்த போலீசார் அவரிடம் இந்த சம்பவம் குறித்தும் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three hariyana people death in road accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->