வாக்கிங் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - விசாரணையில் சிக்கிய இளைஞர்கள்.! - Seithipunal
Seithipunal


வாக்கிங் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - விசாரணையில் சிக்கிய இளைஞர்கள்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பேடராயனதொட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனிரத்னம்மா. இவர் நேற்று முன்தினம் மாலை தனது தங்கை மகனுடன் நடை பயிற்சி சென்றுள்ளார். அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால், பயந்துபோன உறவினர்கள் இருவரையும் பல இடங்களில் தேடியுள்ளனர். 

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 3 வாலிபர்கள், காயங்களுடன் ஒரு சிறுவன் அந்த புதருக்குள் அழுது கொண்டிருந்ததாகவும், அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாணமாக கிடப்பதாகவும் கூறி சிறுவனை குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதே போன்று, அந்த மூன்று இளைஞர்களும் போலீசுக்கு தகவல் தெரிவித்ததுடன், பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளனர். அதன்படி, போலீசார் அங்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

பின்னர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் நடைபெற்ற விசாரணையில், புகார் அளித்த அந்த மூன்று இளைஞர்களும், ஆள் நடமாட்டமே இல்லாத அந்த பகுதியில் தொடர்ந்து நடமாடி வந்ததையடுத்து, போலீசார் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரிடமும் தனித்தனியே அழைத்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி தகவல்களை தெரிவித்ததால் அவர்கள் மூன்று பேரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, போலீசார் குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for sexuall harassment in karnataga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->