நின்ற லாரியில் மோதிய அரசு பேருந்து - 3 பேர் பலி; 24 பேர் படுகாயம்.!
three peoples died and 24 peoples injured for accident in rajasthan
நின்ற லாரியில் மோதிய அரசு பேருந்து - 3 பேர் பலி; 24 பேர் படுகாயம்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அரசு பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து பார்சோ கிராமம் அருகே வந்தபோது, முன்னால் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம், மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த ஓட்டுநர் கமலேஷ், நடத்துனர் பிர்ஜேந்திரா மற்றும் குவாலியரை சேர்ந்த பண்டி உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 24 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். மேலும், இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா? என்று கவனித்து வருகின்றனர்.
பின்னர் போலீசார் இந்த விபத்திற்கு காரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples died and 24 peoples injured for accident in rajasthan