உ. பியில் பரபரப்பு.! 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகர் ஹஜ்ரத்கஞ்ச் பகுதியில் சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ. ஷாகித் மன்சூர் என்பவரின் மகன் மற்றும் மருமகனால் விலைக்கு வாங்கப்பட்டுள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவித்தனர். 

இதனை தொடர்ந்து, போலீசார் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வின் மகனை கைது செய்தனர். அங்கு அவரிடம் சுமார் ஒரு மணிநேர விசாரணை நடத்தப்பட்டு பின்பு, அவரை இன்று அதிகாலை லக்னோவுக்கு கொண்டு சென்றனர். 

நவாஷிஷ் மகள் பெயர் சூட்டபட்ட அந்த கட்டிடம் முறையான அனுமதியின்றி சட்டவிரோத வகையில் கட்டப்பட்டுள்ளது என்று மாநில டி.ஜி.பி. சவுகான் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஆதித்யநாத் உத்தரவின் படி, மூன்று பேர் கொண்ட கமிட்டி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த கட்டிடம் இடிந்ததற்கான காரணம் குறித்து விவரம் தெரிய வரவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் இந்த குழு கட்டிடம் இடிந்ததற்கான அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றது. இதைத்தொடர்ந்து அந்த இடத்தில மீட்பு பணி நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died for building collapse in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->